அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, February 08, 2017

ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை

                தினம் ஒரு ஹதீஸ் -433

நமது உள்ளத்தில் பல தவறான எண்ணங்கள் ஏற்படலாம், அவை மிகவும் பாரதூரமானவைகளாக, ஈமானை தகர்க்கக் கூடியவைகளாகக் கூட இருக்கலாம், ஆனால் அதை வெளிப்படுத்திப் பேசிவிடக் கூடாது, அல்லாஹ்வின் அச்சம் நம்மைத் தடுக்க வேண்டும், மனிதனுக்கு அத்தகைய எண்ணம் எழுவது இயல்பே, ஆனால் இறையச்சத்தால் அதை வெளிப்படுத்தாமல் இருப்பது தான் உண்மையான இறைநம்பிக்கை. உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை;) மன்னித்துவிடுகிறான்.(புகாரி 6664)

நபி (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில (குழப்பமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ) காரியமாகக் கருதுகிறோம் (இது பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?)” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 209

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.