அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, February 09, 2017

அல்லாஹ்விற்காக என்ற எண்ணத்துடன் செய்யும் நற்செயலுக்காக மக்கள் பாராட்டினால்

             தினம் ஒரு ஹதீஸ் -435

எண்ணத்தைப் பொறுத்தே செயல்களுக்கான கூலி அமைகின்றன, எந்த ஒரு நற்செயலையும் அல்லாஹ்விற்காக மட்டுமே செய்ய வேண்டும், மாறாக பிறர் தன்னை புகழ வேண்டும் என்பதற்காக செய்வது முகஸ்துதி ஆகும், முகஸ்துதி என்பது சிறிய இணைவைத்தல், ஆனால் ஒருவர் முகஸ்துதிக்கு அல்லாமல், அல்லாஹ்விற்காக என்ற எண்ணத்துடன் மட்டுமே நற்செயல் புரிகிறார். அதற்காக அவரை மக்கள் பாராட்டினால் இதனால் அவருக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை, அது அவரின் நற்செயலுக்கு அல்லாஹ்வின் அங்கீகாரத்தை தெரிவிக்கும் நற்செய்தியாகும். ஆனால் இதனால் தற்பெருமை வந்து விடக்கூடாது, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்களிடம், “ஒரு மனிதர் (அல்லாஹ்விற்காக) நற்செயல் புரிகிறார். அதற்காக அவரை மக்கள் பாராட்டிப் பேசுகின்றனர். இதைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அது இறைநம்பிக்கையாளருக்கு முன் கூட்டியே வரும் நற்செய்தியாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 4223

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.