அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, February 02, 2017

ஜனாஸாவைப் பின்தொடர்தலின் ஒழுங்கு -1

                   தினம் ஒரு ஹதீஸ் -427

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஜனாஸாவை பின்தொடர்வதும் ஒன்று (புகாரி 1240), ஜனாஸாவைத் தூக்கிச் செல்லும் போது நாம் வாகனத்திலும் பின்தொடரலாம், ஆனால் வாகனத்தில் செல்பவர்கள் ஜனாஸாவிற்கு முன்பாக செல்லக் கூடாது, பின்னால் தான் செல்ல வேண்டும், பின்தொடர்தலுக்காக நடந்து செல்பவர்கள் அவர்கள் விரும்பியவாறு ஜனாஸாவின் முன்பாகவோ, பின்வாகவோ நடந்து செல்லலாம். நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர்கள் ஜனாஸாவிற்கு முன்பாக நடந்து சென்றிருக்கிறார்கள் (திர்மிதீ 929).

வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர், அவர் விரும்பியவாறு செல்லலாம்; மேலும் சிறுவர்களுக்கும் (ஜனாஸா) தொழுகை நடத்தப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல்: நஸாயீ 1932

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.