அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, January 30, 2017

ஸஜ்தாவில் முகத்தை வைக்க வேண்டிய இடம்

                 தினம் ஒரு ஹதீஸ் -424

சிலர் ஸஜ்தா செய்யும் போது இரு கைகளையும் தரையில் இணைத்து வைத்து அந்த கைகளின் மேற்புறத்தில் முகத்தை வைப்பார்கள், இது தவறான முறை, இரு உள்ளங்கைகள் எப்படி ஸஜ்தாவில் தரையில் படுகிறதோ, அது போல் முகமும் ஸஜ்தாவில் தரையில் படத்தான் வேண்டும், ஸஜ்தாவில் இரு உள்ளங்கைகளையும் தரையில் இணைத்து வைக்காமல் தனித்தனியே வைத்து, அவ்விருகைகளுக்கும் இடையே உள்ள இடத்தில் (தரையில்) முகத்தை வைக்க வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஸஜ்தா செய்யும் போது தமது முகத்தை எவ்விடத்தில் வைப்பார்கள்?‘ என்று நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “தமது இரு கைகளுக்கும் இடையில்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ இஸ்ஹாக் (ரஹ்)
நூல்: திர்மிதீ 251


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.