அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, January 11, 2017

அனுமதிக்கப்பட்ட இரண்டு காரியங்களில் எளிதானதையே தேர்ந்தெடுத்தல்

                     தினம் ஒரு ஹதீஸ் -405

ஒன்றைவிட மற்றொன்று எளிதானதாக இருக்கும் இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்வு செய்துகொள்ளும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விருப்ப உரிமை வழங்கப் பெற்றால், அவர்கள் அவ்விரண்டில் எளிதானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் (எப்போதும்) தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால், மக்களிலேயே அவர்கள் தான் அதிலிருந்து (விலகி) வெகு தொலைவில் நிற்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அஹ்மத் 24723

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.