அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, January 28, 2017

நட்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை

                தினம் ஒரு ஹதீஸ் -422

“உன் நண்பனைப் பற்றி சொல்; நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்” என்று ஒரு சொல்வழக்கு உண்டு, சேர்க்கை சரியில்லாததால் தன் வாழ்வைத் தொலைத்தவர்கள் பலர், நாம் நல்லவர்களாக இருப்பது எப்படி முக்கியமோ, அதே போல் நாம் நட்பு கொள்ளக் கூடியவர்களையும் நல்லவர்களாகத் தேர்ந்தேடுப்பதும் முக்கியமானதே, எனவே நாம் யாரிடம் நட்பு வைத்துள்ளோம் என்பதில் கவனமாக இருத்தல் அவசியம்..

ஒருவர் தன் தோழனின் வழியில் தான் இருப்பார், எனவே உங்களில் ஒருவர் யாரிடம் தோழமை கொண்டுள்ளார் என (கவனமாகப்) பார்த்துக் கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 4195

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.