அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, January 06, 2017

ஜும்ஆவின் நன்மைகளைப் பெற

                      தினம் ஒரு ஹதீஸ் -400

ஜும்ஆ நாளன்று ஒருவர் குளித்து, (தம்மிடம் உள்ள வாசனைத் திரவியத்தை பூசிக் கொண்டு, தம்மிடம் வாசனைத் திரவியம் இல்லாவிட்டால்) தனது மனைவியிடத்தில் வாசனை திரவியம் இருக்குமானால் அவ்வாசனை திரவியத்தை பூசிக் கொள்கின்றார். தனது ஆடைகளில் நல்லதை அணிகின்றார். (பள்ளியில் நுழைந்ததும், அங்கு அமர்ந்துள்ள) மக்களை தாண்டவுமில்லை. சொற்பொழிவு நடக்கும் போது அச்சொற்பொழிவை வீணாக்கவுமில்லை என்றால், (இவரது இந்த நற்செயல்கள்) இரண்டு ஜும்ஆக்களுக்கு இடையில் ஏற்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகி விடுகின்றன. எவர் சொற்பொழிவை வீணடித்து மக்களை தாண்டிச் சென்று விடுகின்றாரோ அவருக்கு (அந்த ஜும்ஆ) லுஹர் தொழுகையாக ஆகி விடுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்-ஆஸ் (ரலி)

நூல்: பைஹகீ / அஸ்-ஸுனன் அல்-குப்ரா 5430

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.