அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, January 31, 2017

அல்லாஹ்விற்கு இணைகற்பிக்காதவர்கள் ஜனாஸா தொழுகை தொழுவதன் சிறப்பு

               தினம் ஒரு ஹதீஸ் -425

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய புதல்வர் “குதைத்’ (உஸ்ஃபான்) எனுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “குறைப்! மக்கள் ஒன்றுகூடிவிட்டனரா எனப் பார்” என்று கூறினார்கள். நான் சென்று பார்த்தபோது அங்கு மக்களில் சிலர் குழுமியிருந்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது “அவர்கள் நாற்பது பேர் இருப்பார்களா?, சொல்” என்றார்கள். நான் “ஆம்’ என்றேன். “அதை (மய்யித்தை) எடுத்துக்கொண்டு புறப்படுங்கள்” என்று கூறிவிட்டு, “ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காத நாற்பது நபர்கள் அவருக்காக (அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவருக்கு சொர்க்கத்தைத் தருமாறு பிரார்த்தித்து தொழும் தொழுகையான ஜனாஸா தொழுகையைத்) தொழுதால் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை‘ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்)
நூல்: முஸ்லிம் 1730

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.