அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, January 04, 2017

உருவப்படங்கள்

               தினம் ஒரு ஹதீஸ் -398

சிலர் தங்கள் வீடுகளில் சுவற்றில் முன்னோர்களின் போட்டோக்களைத் தொங்க விடுகின்றனர், இது போன்ற உருவப்படங்கள், உருவச்சிலைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை, ஆனால் இவற்றில் சில விதிவிலக்குகளும் உண்டு, கால்மிதியடியில் உருவம், தலையணையில் உருவம் போன்ற மதிப்பில்லாத உருவங்களுக்கு அனுமதி உண்டு, குழந்தைகள் விளையாடும் உருவப் பொம்மைகள் வைத்துக் கொள்ளலாம், துணிகளில் சிறு அளவிலான உருவப்படங்களுக்கும் அனுமதி உண்டு, உயிற்றைகளின் உருவப்படங்களை தாராளமாக வைத்துக் கொள்ளலாம், அதில் பிற மதத்தினரால் புனிதமாகக் கருதப்படும் உயிரற்றவைகளின் படங்கள், சிலைகளுக்கும் அனுமதி இல்லை..


நான் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்து, அவர்களை (விருந்திற்கு) அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது திரைச்சீலையில் உருவம் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் வெளியேறி விட்டார்கள். பிறகு, “எந்த வீட்டில் உருவங்கள் உள்ளதோ அந்த வீட்டில் (இறைவனின் அருளைக் கொண்டு வரும்) மலக்குகள் நுழைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: நஸாயீ 5284

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.