அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, January 20, 2017

உரை நிகழ்த்துபவர்களுக்காக

                    தினம் ஒரு ஹதீஸ் -414


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஏதேனும்) தேவையினிமித்தம் உரை நிகழ்த்தும் முன் கூற வேண்டிய வாசகங்களைக் கற்றுத்தந்தார்கள். (அவ்வாசகங்களாவன:) அல்ஹம்துலில்லாஹி / இன்னல் ஹம்துலில்லாஹி நஹ்மதுஹூ வநஸ்தயீனுஹூ வநஸ்தஃபிருஹூ வநவூதுபில்லாஹி மின்ஷூருரி, அன்புஸினா, மன்யஹ்தில்லாஹூ ஃபலாமுழில்லஹூ வமன்யுழ்லில் ஃபலா ஹாதியலஹூ. அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹூ வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ (புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! / நிச்சயமாக, புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனிடமே உதவி தேடுகிறோம். அவனிடமே பாவமன்னிப்பு தேடுகிறோம். எங்கள் உள்ளங்களின் தீங்குகளை விட்டும், நாங்கள் செய்த தீங்குகளிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவனை வழிகெடுப்போன் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிதவறச் செய்து விட்டானோ அவனுக்கு நேர்வழி காட்டுவோன் யாரும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்.) இதற்குப் பின் அல்குர்ஆனின் பின்வரும் மூன்று வசனங்களை ஓதினார்கள்: 
யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்தகுல்லாஹ் ஹக்கதுகாதிஹி வலா தமூதுன்ன இல்லா வஅன்தும் முஸ்லிமூன். (3:102) (நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!) 
யா அய்யுஹன்னாஸுத்தகூ ரப்பகுமுல்லதீ கலககும் மின்னஃப்ஸின்வ் வாஹிததின் வகலக மின்ஹா ஸவ்ஜஹா வபஸ்ஸ மின்ஹுமா ரிஜாலன் கஸீரன்வ் வநிஸா வத்தகுல்லாஹல்லதீய் தஸாஅலூன பிஹி வல்அர்ஹாம் இன்னல்லாஹ கான அலைக்கும் ரகீபா (4:1) (மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.) 
யா அய்யுஹல்லதீன் ஆமனூ இத்தகுல்லாஹ் வகூலூ கவ்லன், ஸதீதா யுஸ்ஸிஹ் லகும் அஃமாலகும் வயக்பிர் லகும் துனூபக்கும் வமன்யுதியில்லாஹ வரசூலஹூ ஃபகத் ஃபாஜ ஃபவ்ஜன் அளீமா (33:70,71) (நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.) பின்னர் தமது உரையை நிகழ்த்தினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: தாரமீ 2134

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.