அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, January 18, 2017

அல்லாஹ், அளவற்ற அருளாளன், நிகரற்ற பேரன்புடையவன்

                      தினம் ஒரு ஹதீஸ் -412

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு பாகத்தை (மனிதன், ஜின், பறவைகள், மிருகங்கள், ஊர்வன என) அனைத்துப் படைப்பினங்களுக்கிடையே அல்லாஹ் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன் மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டி மீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 4291

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.