அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, January 15, 2017

இவ்வுலகில் நாம் செய்த செயல்கள் மட்டுமே மறுமையிலும் நம்முடன் வரும்

                    தினம் ஒரு நபிமொழி- 409

நமது மறுமை வாழ்வு நல்ல விதத்தில் அமைய வேண்டுமென்று விரும்பினால் அதற்கு நாம் தான் முயற்சி செய்ய வேண்டும், ஏனெனில் இவ்வுலகில் நாம் செய்த நற்செயல்கள் மட்டுமே மறுமையிலும் நம் கூட வரும், இன்று நம்முடன் இருக்கும் நமது குடும்பத்தினர்கள் நாளை வரமாட்டார்கள், நாம் சேமித்த செல்வங்களும் நம்முடன் வராது, அவைகளுடனான நமது பந்தம் இவ்வுலகத்தோடு முடிவடைந்து விடும், மண்ணறையில் நம்மைத் தனியாக விட்டு விட்டு அனைவரும் சென்று விடுவார்கள், எனவே நம்முடன் மறுமையிலும் வரும் நற்செயல்களை புரிவதில் ஆர்வம் காட்ட வேண்டும்…

இறந்துபோனவரைப் பின்தொடர்ந்து மூன்று பொருட்கள் செல்கின்றன. அவற்றில் இரண்டு திரும்பிவிடுகின்றன; ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ 2313

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.