அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, December 09, 2016

மார்க்கம் நிறைவடைந்ததாகக் கூறும் வசனம் இறங்கிய தினம்

               தினம் ஒரு ஹதீஸ் -372


யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் ஓதிக்கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப்பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக் கொண்டிருப்போம் என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் அது எந்த வசனம்? எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவுபடுத்தி விட்டேன். உங்கள் மீது எனது அருள்கொடையை முழுமைப்படுத்திவிட்டேன். இஸ்லாமையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன் (5:3) (என்பதே அந்த வசனமாகும்) என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அரஃபா பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போது தான் என்றார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)
நூல்: புகாரி 45No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.