அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, December 13, 2016

உறுதியான வீரமுள்ள செயல் எது?

            தினம் ஒரு குர்ஆன் வசனம் -376

ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (அல்குர்ஆன்: 42:43)


“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக! நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக! உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக! நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 31:17)


(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
(அல்குர்ஆன் 3:186)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.