அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, December 03, 2016

ஐவேளைத் தொழுவதன் சிறப்பு

               தினம் ஒரு ஹதீஸ் -366

உங்களில் ஒருவரது (வீட்டு) வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அ(வ்வாறு நீராடுவ)து அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்? என்று கேட்டார்கள். அவரது (மேனி யிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடாது என்று மக்கள் பதிலளித்தார்கள். இது தான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இ(வற்றை நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸாயீ 458


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.