அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, December 08, 2016

மறுமையில் யாருடைய (அவ்லியாக்கள், நல்லோர்கள்) சிபாரிசும் பயனளிக்காது

         தினம் ஒரு குர்ஆன் வசனம் -371


ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.

(அல்குர்ஆன் 74:48)

எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது; உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன” (என்று கூறுவான்).  

(அல்குர்ஆன் : 6:94)


இவர்களிடம் கூறும்: “அல்லாஹ்வை விடுத்து (உங்கள் காரியங்களை நிறைவேற்றுபவர்களாய்) எந்தக் கடவுளர்களை நீங்கள் கருதுகிறீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள்! உங்களின் எந்தத் துன்பத்தையும் அவர்களால் அகற்றிவிட முடியாது; மாற்றிவிடவும் முடியாது.


(அல்குர்ஆன் : 17:56)

அவர்களேகூட தம் இறைவனின் நெருக்கத்தை அடைவதற்கான வஸீலாவை வழிவகையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்; தங்களில் யார் அவனுக்கு அதிகம் நெருக்கமானவராய் ஆவது என்பதற்காக! மேலும், அவனுடைய அருளை எதிர்பார்த்துக் கொண்டும் அவன் தரக்கூடிய வேதனைக்கு அஞ்சிக் கொண்டும் இருக்கிறார்கள். உண்மையில் அஞ்ச வேண்டியது உம் அதிபதி தரும் வேதனைக்குத்தான்!

(அல்குர்ஆன் : 17:57)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.