அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, December 17, 2016

தொழுகையின் முக்கியத்துவம்

                   தினம் ஒரு ஹதீஸ் -380

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தொழுகையைப் பற்றிக் கூறுகையில், “தொழுகையைப் பேணுதலாகத் தொழுது வருபவருக்கு அது கியாமத் நாளில் ஒளியாகவும், (விசாரணையின் போது) ஆதாரமாகவும், ஈடேற்றமாகவும் ஆகிவிடும். அதைப் பேணுதலாகத் தொழாதவர்களுக்கு, அது கியாமத் நாளில் ஒளியாகவோ, (விசாரணையின் போது) ஆதாரமாகவோ, ஈடேற்றமாகவோ இருக்காது. மேலும் தொழுகையை விட்டவர் கியாமத் நாளில் காரூன், ஹாமான், ஃபிர்அவ்ன் மற்றும் உபை பின் கலப் ஆகிய(கொடிய)வர்களுடன் இருப்பார்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: இப்னுஹிப்பான் 1497

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.