அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, December 10, 2016

தொழுகையை அதற்குரிய நேரத்தில் அடைவதற்கான இறுதி நிலை

                   தினம் ஒரு ஹதீஸ் -373

உதாரணமாக சுப்ஹு தொழுகையின் நேரமானது ஸஹ்ர் முடிவிலிருந்து (சுப்ஹு பாங்கு) சூரியன் உதிக்கும் முன் உள்ள நேரமாகும், இன்றைய (எங்கள் பகுதி) நிலவரமான 5:13 a.m to 6:33 a.m நேரத்தையே எடுத்துக் கொள்வோம், இதன் படி (பஜ்ரின் முடிவான) சூரியன் உதயமாகும் நேரமான 6:33 a.m க்குள் ஒருவர் பஜ்ர் தொழுகையின் ஒரு ரக்அத்தை தொழுது விட்டாரென்றால், அவர் பஜ்ர் தொழுகையை அதற்குரிய நேரத்திலேயே தொழுதவர் ஆவார், மற்ற தொழுகைகளுக்கும் இதே அடிப்படை தான்.தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொண்டவர் அந்தத் தொழுகையை அடைந்து கொள்கிறார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 580No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.