அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, December 04, 2016

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால்

            தினம் ஒரு ஹதீஸ் -367

ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கையில் சிலர் அத்தொழுகையில் சேர வேண்டுமென்பதற்காக ஓடி வருவார்கள், இது பெரும்பாலும் இமாம் ருகூவில் இருக்கும் நேரங்களில் நிகழும், ஆனால் இவ்வாறு செய்யக் கூடாது, நிதானமாக நடந்து வந்தே சேர்ந்து, பின் விடுபட்டதை நிறைவேற்ற வேண்டும்.


தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்கு ஓடிச்செல்லாதீர்கள்; நடந்தே செல்லுங்கள்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தை (இமாமுடன்) தொழுங்கள்; தவறிப்போனதை (பின்னர் எழுந்து) நிறைவு செய்து கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1053


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.