அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, December 30, 2016

ஜும்ஆவிற்கு தூய்மையாக செல்ல வேண்டும்

                   தினம் ஒரு ஹதீஸ் -393

மக்கள் ஜுமுஆ நாளில் (மதீனா அருகிலுள்ள) தங்கள் குடியிருப்புகளிலிருந்தும் மேட்டுப்புற கிராமங்களிலிருந்தும் முறைவைத்து (ஜுமுஆத் தொழுகைக்கு) வந்து கொண்டிருந்தனர். புழுதிகளில் அவர்கள் நடந்துவருவதால் அவர்கள் மீதும் புழுதியும் வியர்வையும் காணப்படும். அவர்களி(ன் உட)லிருந்து வியர்வை வழியும். (இந்த நிலையில்) -என் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்து கொண்டிருக்கும் போது- அவர்களில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த தினத்துக்காக நீங்கள் தூய்மையுடன் இருக்கக்கூடாதா? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 902

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.