அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, December 20, 2016

அண்டை வீட்டாரிடம் நடந்து கொள்ளும் முறையும், அதற்கான மறுமை பலனும்

                தினம் ஒரு ஹதீஸ் -383


ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் அதிகமாக (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள், (உபரியான) நோன்புகள் நோற்கின்றாள், தர்மம் கொடுக்கின்றாள், ஆனால், தன் அண்டைவீட்டாருக்குத் தன் நாவால் துன்பம் விளைவிக்கின்றாள்” என்று (அது பற்றிய மறுமை நிலையை அறிவதற்காகக்) கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்பெண் நரகம் புகுவாள்‘ என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் மீண்டும் (வேறோரு பெண்ணைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் குறைவாகவே (உபரியான) நோன்புகள் நோற்கின்றாள், (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள், குறைந்தளவே தர்மமும் செய்கிறாள், இருப்பினும், பாலாடைக்கட்டித்துண்டுகளையாவது தர்மம் செய்து விடுகின்றாள், தன் நாவினால் அண்டை வீட்டாரைத் துன்புறுத்தவில்லை‘ என்று (அது பற்றிய மறுமை நிலையை அறிவதற்காகக்) கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்பெண் சொர்க்கம் புகுவாள்‘ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அஹ்மத் 9462


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.