அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, December 27, 2016

அதிகமாக சிரிக்காதீர்கள்

               தினம் ஒரு ஹதீஸ் -390

சிரிப்பதையோ, நகைச்சுவை உணர்வுடன் இருப்பதையோ இஸ்லாம் தடை செய்யவில்லை, ஆனால் பொய் சொல்லி சிரிக்க வைக்கவோ, பிறரை ஏமாற்றி, பயமுறுத்தி சிரிப்பதோ கூடாது, சிரிப்பதிலும் அளவு கடந்து போய் விடக் கூடாது, ஒரு முஸ்லிம் இம்மையை விட மறுமைக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிகமாக சிரிப்பதானது இறைநினைவு, மரணம், மறுமை சிந்தனையிலிருந்து நம்மை அப்புறப்படுத்தி விடும், அவ்வாறு இறைநினைவு அற்ற உள்ளமானது மரணித்த உள்ளமாகும்.

அதிகமாக சிரிக்காதீர்கள், ஏனென்றால் அதிகமாக சிரிப்பது (இறைநினைவிலிருந்து விலக்குவதன் மூலம்) உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி / அல்-அதபுல் முஃப்ரத் 247

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.