அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, December 07, 2016

இஸ்லாத்தில் புதிய காரியங்களை உருவாக்கியவர்களுக்கு "கவ்ஸர்" நீர் தரப்படாது

                தினம் ஒரு ஹதீஸ் -370

நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் “அல்கவ்ஸர்“ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டு வரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். உடனே நான் "என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்" என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ் "இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது" என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)
நூல் : புஹாரி : 7049No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.