அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, December 18, 2016

பொறுமை

                தினம் ஒரு நபிமொழி- 381

பொறுமையை விடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” (புகாரி 1469). முதலில் எந்த சூழ்நிலையில் மேற்கொள்வதன் பெயர் பொறுமை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். துன்பம் ஏற்பட்டவுடன் மார்க்கம் தடை செய்துள்ளவைகளையெல்லாம், செய்து விட்டு அத்துன்பமே மறந்து போகும் நிலையில் அமைதிக் கொள்வதன் பெயர் பொறுமை ஆகாது, ஏனெனில் நாள் செல்ல செல்ல துன்பத்தின் வலி தானாக மறைந்து விடும், அதில் நம் முயற்சி எதுவும் கிடையாது, மார்க்கம் சிறப்பித்துக் கூறும் பொறுமை என்பது ஒரு துன்பம் ஏற்பட்ட ஆரம்ப கட்டத்தில் அல்லாஹ்விற்காக பொறுத்துக் கொள்வதே ஆகும், இப்பொறுமைக்குத் தான் அல்லாஹ்விடம் நன்மையும் உண்டு.

பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கடைப்பிடிப்பதே ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: முஸ்லிம் 1685

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.