அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, December 11, 2016

அத்தஹிய்யாத் அமர்வில் ஓத வேண்டிய துஆ -3

               தினம் ஒரு ஹதீஸ் -374


நபி (ஸல்) அவர்கள், தொழுகையில் ஸலாம் கொடுக்கும் போது, அத்தொழுகையின் இறுதியில் (அதாவது, கடைசி அமர்வில் அத்தஹிய்யாத், ஸலவாத் ஓதிய பின்பு)“அல்லாஹும்மஃக்ஃபிர்லீ மா கத்தம்த்து வ மா அக்கர்த்து வ மா அஸ்ரர்து வ மா அஃலன்து வ மா அஸ்ரஃப்த்து வ மா அன்த அஃலமு பிஹி மின்னீ. அன்த்தல் முகத்திமு வ அன்த்தல் முஅக்கிரு லா இலாஹ இல்லா அன்த்த” (யா அல்லாஹ்! நான் முந்திச் செய்த பிந்திச் செய்கிற, இரகசிமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த, வரம்பு மீறிச் செய்த, என்னைவிட நீ அறிந்துள்ள (இன்னபிற) பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! நீயே முன்னேறச் செய்பவன். பின்னடைவைத் தருபவன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை)என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி)
நூல்: அபூதாவூத் 1292


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.