அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, November 24, 2016

நோயாளியையோ, இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் அவ்விடத்தில் நல்லதையே சொல்லுங்கள்

                தினம் ஒரு ஹதீஸ் -357

நீங்கள் நோயாளியையோ இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் (அவ்விடத்தில்) நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் “ஆமீன்’ கூறுகின்றனர்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (என் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே, அபூசலமா இறந்துவிட்டார்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இறைவா, என்னையும் அவரையும் மன்னிப்பாயாக! அவருக்கு மாற்றாக அவரைவிடச் சிறந்த துணையை எனக்கு வழங்குவாயாக” என்று கூறுமாறு என்னிடம் சொன்னார்கள். நான் அவ்வாறே பிரார்த்தித்தேன். அவரைவிடச் சிறந்தவரான முஹம்மத் (ஸல்) அவர்களையே அல்லாஹ் எனக்குத் துணையாக வழங்கினான்.

அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 1677

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.