அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, November 23, 2016

கடன்படுவதிலிருந்து பாதுகாப்புக் கோருதல்

                தினம் ஒரு ஹதீஸ் -356

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையி(ன் கடைசி அத்தஹிய்யாத் அமர்வி)ல் பிரார்த்தனை செய்யும் போது,அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால், வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்” (இறைவா! கப்ர் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன், மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், வாழ்வு மற்றும் இறப்பின் போது ஏற்படும் சோதனையிலிருந்தும், உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறுவார்கள். ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம், தாங்கள் கடன்படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புத் தேட என்ன காரணம்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், மனிதன் கடன் படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 832


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.