அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, November 28, 2016

நான்கு அடிமைகளை விடுதலை செய்த நன்மை கிடைக்க

                 தினம் ஒரு ஹதீஸ் -361

“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை கிடையாது. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்)என்று யார் பத்து முறை ஓதுகிறாரோ அவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் நால்வரை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலை செய்தவரைப் போன்றவர் ஆவார்” என்று அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகிறேன்:) அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களின் இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த சுலைமான் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதை அறிவித்துள்ளார்கள். அதில் அறிவிப்பாளர் ஷஅபீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது: நான் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்களிடம், “இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களிடமிருந்து” என்று பதிலளித்தார்கள். ஆகவே, நான் அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களிடம் சென்று, “இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களிடமிருந்து” என்று பதிலளித்தார்கள். ஆகவே, நான் இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களிடம் சென்று, “இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்து (நான் செவியுற்றேன்)” என்று சொன்னார்கள். (ஆகவே, இது அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களின் சொல்லன்று; நபி (ஸல்) அவர்களின் ஹதீஸாகும்.)

நூல்: முஸ்லிம் 5223


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.