அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, September 18, 2016

நபியை நேசித்தல்…

                தினம் ஒரு ஹதீஸ் -290

நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு மாற்றமாக எவர் என்ன சொன்னாலும் அவைகளைத் தூக்கி எறிந்து விடவேண்டும், நாம் நபி (ஸல்) அவர்கள் கூற்றை மட்டுமே எடுத்துச் செயல்படுத்த வேண்டும், அது தான் நாம் மற்ற அனைவரையும் விட நபி (ஸல்) அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை நேசிக்கிறோம் என்று அர்த்தம், அதை விடுத்து நபிவழி இன்னதென்று தெரிந்தும் மற்றவர்களுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அதைப் புறக்கணித்தால் அவர் உண்மையான இறைநம்பிக்கையாளராக ஆக முடியாது.


“உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆக மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: தாரமீ 2658

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.