அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, September 08, 2016

குர்பானி பிராணிகள் எப்படி இருக்க வேண்டும்

             தினம் ஒரு ஹதீஸ் - 280

வெளிப்படையாக தெரியக் கூடிய ஊனம், நொண்டி, பிராணியை குர்பான் கொடுக்க கூடாது. வெளிப்படையாக தெரியக் கூடிய குருடு, ஓற்றைக் கண் குருடுள்ள பிராணியை குர்பான் கொடுக்க கூடாது. மேலும் வெளிப்படையாக தெரியக் கூடிய எந்த நோயுள்ள பிராணியையும் குர்பான் கொடுக்க கூடாது. சதையில்லாத மெலிந்த பிராணியையும் குர்பான் கொடுக்க கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அல்பரா பின் ஆசிப்(ரலி)
நூல் : திர்மிதி 1417


பிராணிகளின் கண்களையும் காதுகளையும் கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபியவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சிறிதளவு காது வெட்டப்பட்டவை காது கிழிக்கப்பட்டவை காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவாகள் கட்டளையிட்டார்கள்.

நூல்:  அபுதாவுத் 2422;  திர்மிதி 1418

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.