அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, August 03, 2016

உலக வாழ்க்கைக்கு இறை உதாரணம்!

    தினம் ஒரு குர்ஆன் வசனம் -244

அறிந்து கொள்ளுங்கள்; “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும். மேலும், (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும். (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும். (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது. ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர். பின்னர் அது கூளமாகி விடுகிறது. (உலக வாழ்வும் இத்தகையதே. எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் (தீர்ப்பு நாளில்) கடுமையான வேதனையுண்டு. (முஃமின்களுக்கு – நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.

(அல்குர்ஆன்: 57:20)
 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.