அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, August 05, 2016

மறுமையை நினைவூட்டும் ஸியாரதுல் குபூர்…

              தினம் ஒரு ஹதீஸ் -246

ஸியாரத் என்றால் சந்தித்தல், ஸியாரதுல் குபூர் என்றால் மண்ணறைகளை சந்தித்தல் என்பது பொருள். நம்முடன் வாழ்ந்தவர்களை எல்லாம் மரணம் ஆட்கொண்டது போல் நாமும் மரணிப்போம், அதற்குப் பின் மறுமை வாழ்க்கை உண்டு, என்ற நம்பிக்கை வந்து அதற்காக நம் செயல்களை சீர்ப்படுத்த வேண்டியே ஸியாரத் அனுமதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில், மறுமை வாழ்வின் முதல் நிலையே மண்ணறையிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. (குறிப்பு:ஸியாரத் செய்கிறேன் என்ற பெயரில் நபி (ஸல்) அவர்கள் தடுத்தஅல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத்தரும் சமாதி வழிபாடு நடக்கும் தர்ஹாக்களுக்கு சென்று விடக் கூடாது. (தர்ஹாவே இஸ்லாத்தில் தடை, என்றிருக்கையில் அங்கு செல்வதை எப்படி ஸியாரத் என்று சொல்ல முடியும்? மேலும் அங்கு நடக்கும் கூத்தில் மறுமை சிந்தனையா வரும்?) அனைத்து ஊரிலும் பொதுமையவாடி இருக்கும், ஆணாகயிருந்தாலும், பெண்ணாகயிருந்தாலும் ஸியாரத்துக்காக அங்கே செல்லுங்கள்…
ஸியாரத் செய்கையில் நாம் தான் கப்ர்களில் அடங்கியுள்ள முஸ்லிம்களுக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டுமே தவிர, அவர்களிடம் துஆ கேட்டு விடக் கூடாது, அது ஷிர்க் என்னும் நிரந்தர நரகில் சேர்க்கும் செயலாகும், ஸியாரத் முஸ்லிம்களின் அடக்கத்தலங்களில் மட்டும் தான் செய்ய வேண்டும் என்றில்லை, முஸ்லிமல்லாதவர்களின் அடக்கத்தலங்களிலும் செய்யலாம், ஆனால் முஸ்லிம்களின் அடக்கத்தலங்களில் உள்ளவர்களுக்காக துஆ செய்வது போல், முஸ்லிமல்லாதவர்களின் அடக்கத்தலங்களின் உள்ளவர்களுக்காக துஆ செய்யக் கூடாது..

அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதாகிய எனக்கு, எனது தாயாருடைய அடக்கத்தலத்தை சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டு விட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளை சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : திர்மிதி 1054

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.