அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, August 06, 2016

இணைகற்பிப்போருக்கு நேர்வழி கிடைக்க வேண்டி பிரார்திக்கலாம்…

              தினம் ஒரு ஹதீஸ் -247

இணை கற்பிப்போர்கள் எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்றோ, அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்க வேண்டுமென்றோ எவரும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கக்கூடாது. மாறாக அவர்களுக்கு நேர்வழி கிடைக்க வேண்டி பிரார்த்திக்கலாம்…

துஃபைல் பின் அம்ர் அத்தவ்ஸீ (ரலி) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (எங்கள்) “தவ்ஸ்’ குலத்தார் மாறு செய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து) விட்டார்கள். அவர்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். மேலும் அவர்கள், “தவ்ஸ் குலத்தார் அழியட்டும்” என்றும் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2937

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.