தினம் ஒரு ஹதீஸ் -243
சில பகுதிகளில் இறந்த உடலை கப்ருக்குள் வைக்கும் போது “அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ” என்று கூறுவார்கள், சொல்லப்படும் இவ்வாசகம் எவ்வளவு உயர்ந்ததானாலும் நபி (ஸல்) அவர்கள் இதை எங்கே கூறச் சொல்லியிருக்கிறார்களோ, அங்கே கூறினால் மட்டும் தான் அதற்குரிய நன்மை கிடைக்கும், இதை உடலை கப்ருக்குள் வைக்கும் போது கூறினால் அது பித்அத் ஆகிவிடும், எனவே உடலை குழிக்குள் வைக்கும் போது எதைச் சொல்ல மார்க்கம் கட்டளை இடுகிறதோ அதைத் தான் கூற வேண்டும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: இப்னுமாஜா 1550

இறந்த உடலை கப்ருக்குள் வைக்கும் போது “பிஸ்மில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அபூ ஹாலித் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், இறந்த உடலை கப்ருக்குள் வைக்கும் போது “பிஸ்மில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரசூலில்லாஹ்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் எனவும், ஹிஷாம் (ரஹ்) அவர்களது வழி அறிவிப்பில், “பிஸ்மில்லாஹி வஃபீ ஸபீலில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரசூலில்லாஹ்” என்று கூறுவார்கள் எனவும் இடம்பெற்றுள்ளது.
நூல்: இப்னுமாஜா 1550
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.