அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, August 13, 2016

ஒரு சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்பட…

                தினம் ஒரு ஹதீஸ் -254

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சபையிலிருந்து (முடிந்து) எழுந்திருக்கையில் (கடைசியாக) “ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபிஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பிரு(க்)க வஅதூபு இலைக்” (இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்) என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! கடந்த காலத்தில் சொல்லாத வார்த்தைகளை (இப்போது) சொல்கின்றீர்களே?” என்று கேட்ட போது, “அது சபையில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூபர்ஸா அல் அஸ்லமி (ரலி)
நூல்: அபூதாவூத் 4219

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.