அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, August 03, 2016

இறந்தவரை அடக்கம் செய்த பின் பிறர் செய்ய வேண்டியவை…

              தினம் ஒரு ஹதீஸ் -244

சில ஊர்களில் இறந்தவரை அடக்கம் செய்து விட்டு அருகில் இமாம் நின்று கையில் ஒரு தாளை வாசித்து இறந்தவரிடம் அரபியில் பேசுவார், அதாவது உன்னிடம் மலக்குகள் வருவார்கள், இன்ன கேள்வி கேட்பார், நீ இன்ன பதில் கூறு என எடுத்துரைப்பார், இதற்கு தல்கீன் ஓதுதல் என்று பெயர், பின் சப்தமிட்டு அவர் துஆ ஓத, சுற்றியிருப்பவர்கள் சடங்கிற்கு ஆமீன் போட்டு விட்டு கலைந்து சென்று விடுவார்கள், இத்தகைய செயல்கள்  நரகில் சேர்க்கும் பித்அத் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இறந்தவரை அடக்கம் செய்த பின் அவருக்காக மக்கள் தனித்தனியே பிரார்த்திப்பது தான் நபிவழி…


மரணித்தவரை அடக்கி முடித்தவுடன் அதனருகில் நின்று கொண்டு நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறுவார்கள்: “(இறந்து விட்ட) உங்கள் சகோதரனுக்காக பாவமன்னிப்பு தேடுங்கள். (விசாரிக்கப்படும் போது) உறுதியாக இருக்க வேண்டும் என்று அவருக்காக வேண்டுங்கள். ஏனென்றால் இப்போது அவர் விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)
நூல்: அபூதாவூத் 3221


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.