அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, August 19, 2016

ஜும்ஆ தொழுகையில் ஓத வேண்டியவை -2

                 தினம் ஒரு ஹதீஸ் -260

அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுநராக நியமித்துவிட்டு மர்வான் பின் ஹகம் மக்காவிற்குச் சென்றார். (இந்தக் காலகட்டத்தில்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு ஜும்ஆத் தொழுகை நடத்தினார்கள். அதில் “அல்ஜுமுஆ‘ எனும் (62ஆவது) அத்தியாயத்தை (முதல் ரக்அத்தில்) ஓதினார்கள். பிறகு இரண்டாவது ரக்அத்தில் “இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன‘ (என்று தொடங்கும் 63ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். தொழுகை முடிந்ததும் அபூஹுரைரா (ரலி) அவர்களைச் சந்தித்து, “நீங்கள் இரண்டு அத்தியாயங்களை ஓதினீர்கள். இவ்விரு அத்தியாயங்களும் அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூஃபாவில் இருந்த போது ஓதிவந்தவை” என்றேன். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளில் இவ்விரு அத்தியாயங்களையும் ஓத நான் கேட்டுள்ளேன்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்)
நூல்: முஸ்லிம் 1591

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.