அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, July 12, 2016

அத்தஹிய்யாத் துஆ...

              தினம் ஒரு ஹதீஸ் -222


தொழுகையின் (இருப்பில் இருக்கும்) போது ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு ஒருவர் மீது மற்றவர் ஸலாம் கூறி வந்தோம். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள்,அத்தஹியா(த்)து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன் னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு” (சொல், செயல், பொருள் வடிவிலான எல்லாக் காணிக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் அருள்வளமும் ஏற்படட்டுமாக! எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தி ஏற்படட்டுமாக! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதிமொழிகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்) என்று கூறுங்கள்! இவ்வாறு நீங்கள் கூறினால் வானம், பூமியிலுள்ள எல்லா நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறியவர்களாவீர்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி 1202

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.