அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, July 21, 2016

இச்சை நீர் வெளியேறுவதால் குளிப்பு கடமையாகாது…

                    தினம் ஒரு ஹதீஸ் -231

நான் இச்சை நீர் (மதீ) அதிகமாக வெளிப்படும் ஆடவனாக இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமா (ரலி) என் மனைவியாக இருந்ததே இதற்குக் காரணம். எனவே, நான் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களிடம் (இது குறித்து நபியவர்களிடம் கேட்குமாறு) கூறினேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆணுறுப்பைக் கழுவிக்கொண்டு, உளூ செய்து கொள்ள வேண்டும்; (குளிக்க வேண்டியதில்லை)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் 508

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.