அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Saturday, July 23, 2016

மர்யம் (அலை) அவர்கள், ஹாரூன் (அலை) அவர்களின் சகோதரியா?

             தினம் ஒரு ஹதீஸ் -233

கிறிஸ்தவர்களின் பைபிள் இறைவேதம் கிடையாது என்று நிரூபித்து அவர்களை உண்மை மார்க்கமாம் இஸ்லாத்தின் பால் அழைக்கும் விதமாக, பைபிளில் உள்ள பிழைகள், முரண்பாடுகள், ஆபாசங்கள் ஆகியன பல முஸ்லிம் சகோதரர்களால் பட்டியல் போடப் பட்டு வருகின்றது. அவற்றுக்கு எந்த பதிலும் கிறிஸ்தவர்களால் சொல்ல முடியவில்லை. ஆகவே, அதை மழுப்பும் விதமாக குர்ஆனிலும் முரண்பாடு, தவறு உண்டு என்று கூறி தாங்கள் துளியளவும் சிந்திக்கும் திறனற்றவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர். அப்படி குர்ஆன் மேல் வைக்கப்படும் பொய்க் குற்றச்சாட்டு ஒன்றையும், அதற்கான பதிலையும் இப்பதிவில் காண்போம்.


குர்ஆன் 19:27,28 ல் மர்யம் (அலை) அவர்கள் ‘ஹாரூனின் சகோதரியே!’ என்று அழைக்கப்பட்டதாக உள்ளது. ஈஸா (அலை) அவர்களின் தாயான மர்யம் (அலை) அவர்கள் காலம் எது? ஹாரூன் (அலை) அவர்கள் காலம் எது? என்று தெரியாமல் குர்ஆன் தவறு (?) விட்டு விட்டது என்று கூறி தங்கள் அறியாமையை காட்டுகின்றனர். (உலகில் ஹாரூன் என்ற பெயரில் அல்லாஹ்வின் தூதரான ஹாரூன் (அலை) அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று இவர்கள் நினைத்து விட்டார்கள் போலும்). இது போன்ற வாதம் தற்போது மட்டும் வைக்கப்படவில்லை, நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே வைக்கப்பட்டு, அதற்கு தெளிவாக பதிலும் அளிக்கப்பட்டு விட்டது.


நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கிணங்க) “நஜ்ரான்’ எனும் ஊருக்கு சென்ற போது அ(ந்நாட்டுக் கிறித்த)வர்கள், “நீங்கள் (குர்ஆனில் மர்யம் (அலை) அவர்களைப் பற்றி) “ஹாரூனின் சகோதரியே!’ என்று ஓதுகிறீர்கள். (ஆனால், ஹாரூன் (அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களின் சகோதரர்.) மூஸா (அலை) அவர்களோ ஈஸா (அலை) அவர்களுக்கு பல (நூறு) ஆண்டுகளுக்கு முந்தையவர் ஆயிற்றே! (அப்படியிருக்க, மர்யம் (அலை) அவர்கள், ஹாரூன் (அலை) அவர்களின் சகோதரியாக எப்படி இருக்க முடியும்?)” என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் (இஸ்ரவேலர்கள்) தங்களுக்கு முந்தைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர் (அந்த வகையில் ஹாரூன் என்ற பெயரில் மர்யம் (அலை) அவர்களுக்கு ஒரு சகோதரர் இருந்தார்)” என்றார்கள்.

அறிவிப்பவர்: முஃகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல்: திர்மிதீ 3155

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.