அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, July 20, 2016

கடமையான குளிப்பை நிறைவேற்றும் முறை…

               தினம் ஒரு ஹதீஸ் -230

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் போது முதலில் தம் கைகளை (மணிக்கட்டுவரை) இரண்டு அல்லது மூன்று தடவை கழுவுவார்கள். பிறகு வலக் கையால் (தண்ணீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றி இடக் கையினால் பிறவி உறுப்பைக் கழுவுவார்கள். பிறகு இடக் கையை பூமியில் வைத்து நன்கு தேய்த்துக் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்காக உளூ செய்வதைப் போன்று உளூ செய்வார்கள். (அதில் கால்களை மட்டும் கழுவாமல் இருப்பார்கள்.) அதன் பின்னர் தண்ணீரை அள்ளி மயிர்க்கால்களுக்கு இடையே விரல்களை நுழை(த்துத் தலையைத் தேய்)ப்பார்கள். தலையின் அடிப்பாகம் முழுவதும் நனைந்துவிட்டதாகத் தெரிந்ததும் இரு கைகளிலும் மூன்று தடவை தண்ணீர் அள்ளி தலையில் ஊற்றுவார்கள். பிறகு மேனி முழுவதிலும் (நனையும் படி உடலில்) தண்ணீர் ஊற்றுவார்கள். பின்னர் அவ்விடத்திலிருந்து சற்று நகர்ந்து (நின்று, கடைசியாகத்) தம் கால்களைக் கழுவுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) / மைமூனா (ரலி)
நூல்: முஸ்லிம் 526 / 528

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.