அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, July 25, 2016

அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைத்தல் அவசியம்…

               தினம் ஒரு ஹதீஸ் -235

அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற பேரன்பு கொண்டவன், அவனிடம் மன்னிப்புக் கேட்டால், கண்டிப்பாக நம்மை மன்னித்து அரவணைப்பான் என்று அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைத்திருக்கும் நிலையிலேயே நாம் மரணிக்க வேண்டும். அவனை கொடூரமானவனாக கருதி விடக் கூடாது.

“வல்லமையும், மாண்பும் மிக்க, அல்லாஹ்வைப் பற்றி நல்ல எண்ணம் கொண்டவராகவே தவிர உங்களில் எவரும் மரணிக்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூறியதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரலி)
நூல்: முஸ்லிம் 5517

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.