அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, May 15, 2016

மறுமைநாளில் நிச்சயமாக அல்லாஹ்வைக் காணலாம்…

            தினம் ஒரு ஹதீஸ் - 164


'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மறுமைநாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?' என்று மக்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?” என்று கேட்டார்கள். மக்கள், 'இல்லை' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், “பெளர்ணமி இரவில் மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?” என்று கேட்டார்கள். மக்கள், 'இல்லை' என்று பதிலளித்தார்கள். “எனது உயிர் எவனது கைவசம் இருக்கிறதோ, அவன் மீது ஆணையாக! இவ்வாறு தான் உங்களுடைய இறைவனை நீங்கள் (மறுமைநாளில் எவ்வித சிரமுமின்றி) காண்பீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 4730


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.