அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, May 10, 2016

துஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -12

             தினம் ஒரு ஹதீஸ் - 159

நமக்கு எவ்வகையிலாவது இழப்பு ஏற்பட்டு, அதை நாம் அல்லாஹ்விற்காக பொறுமையுடன் இருந்த நிலையில், நாம் இழந்ததை விட சிறந்தது கிடைக்க ஓத வேண்டிய பிரார்த்தனை:


ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது அவர், (குர்ஆனின் 2:156 ல் உள்ள) அல்லாஹ்வின் கட்டளைக்கேற்பஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்’ (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும்,அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா‘ (இறைவா! எனக்கேற்பட்ட இத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக!) என்றும் கூறினால், அ(வர் துன்பத்தை பொறுத்துக் கொண்ட)தற்கு ஈடாக அ(வர் இழந்த)தை விடச் சிறந்ததை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (என் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதைப் போன்றே (“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா” என்று) நான் கூறினேன். அல்லாஹ், அபூசலமாவை விடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதரையே எனக்கு மாற்றாக (கணவராக) வழங்கினான்.

அறிவிப்பவர்: உம்மு சலமா (ரலி)
நூல்: முஸ்லிம் 1675, (1674)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.