அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, May 19, 2016

தொழுகைக்குப் பின் -1

           தினம் ஒரு ஹதீஸ் -168


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “முஆதே! (அல்லாஹ்விற்காக) நான் உன்னை நேசிக்கின்றேன்” என்று கூறினார்கள், அதற்கு நான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக, நானும் உங்களை நேசிக்கின்றேன்” என்று கூறினேன். பின் நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வொரு (கடமையான) தொழுகைக்குப் பின்னரும், “அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னீ இபாத(த்)திக்” (யா அல்லாஹ்! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் உதவி செய்வாயாக!) என்று கூறுவதை நீ விட்டு விடாதே! என நான் உனக்கு அறிவுறுத்துகின்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்: அஹ்மத் 21552


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.