அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, April 28, 2016

பிறரை பயமுறச் செய்யக் கூடாது…

               தினம் ஒரு ஹதீஸ் - 147

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்களில் ஒருவர் உறங்கி விட்டார். சிலர் (அவரது) அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்து வைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்து விட்டது. நபி (ஸல்) அவர்கள், ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், இவரது அம்புகளை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார்” என்று கூறினார்கள். “ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரலி)
நூல்: அஹ்மத் 22555


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.