அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Tuesday, April 26, 2016

தொழுது முடித்தவுடன்أَسْتَغْفِرُ اللهَ ، أَسْتَغْفِرُ اللهَ ، أَسْتَغْفِرُ اللهَ اللَّهُمَّ أَنْتَ السَّلامُ ، وَمِنْكَ السَّلامُ ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ

அஸ்தஃக்ஃபிருல்லாஹ் அஸ்தஃக்ஃபிருல்லாஹ் அஸ்தஃக்ஃபிருல்லாஹ்! அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்

பொருள் : அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுகிறேன்! யா அல்லாஹ்! நீ ஈடேற்றமளிப்பவன். உன்னிடமிருந்து ஈடேற்றம் உண்டாகிறது. கண்ணியம் மாண்பும் உடையவனே! நீயே அருட்பேறுடையவன்.

ஆதாரம் : முஸ்லிம்


اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَأَعُوْذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஜுபுனி வஅவூது பி(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி வஅவூது பி(க்)க மின் ஃபித்னதித் துன்யா வஅவூது பி(க்)க மின் அதாபில் கப்ரி

பொருள் : இறைவா! கோழைத்தனத்தை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். தள்ளாத வயது வரை நான் வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இவ்வுலகின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மண்ண றையின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: புகாரி رَبِّ قِنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ

ரப்பி கினீ அதாப(க்)க யவ்ம தப்அஸு இபாத(க்)க

பொருள் : என் இறைவா! உனது அடியார்களை நீ எழுப்பும் நாளில் உனது வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!

ஆதாரம்: முஸ்லிம்


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.