அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, March 07, 2016

அறியாமைக் கால வழக்கங்கள்...

        தினம் ஒரு ஹதீஸ் - 95


      “என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள். (அவை யாவன:) குலப்பெருமை பாராட்டுவது, 
(அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, 
கிரகங்களால் மழை பொழியும் என எதிர் பார்ப்பது மற்றும்
ஒப்பாரிவைத்து அழுவது. 
ஒப்பாரி வைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)


நூல்: முஸ்லிம் 1700


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.