அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Monday, March 14, 2016

பாங்கிற்குப் பதில் கூறுதல்…

      தினம் ஒரு ஹதீஸ் -102


“முஅத்தின் (பாங்கு சொல்பவர்) “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னால் நீங்களும் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்லுங்கள்.  பின்பு அவர், “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதிமொழிகிறேன்) என்று சொன்னால் நீங்களும் “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்று உறுதிமொழிகிறேன்) என்று சொல்லுங்கள். பின்பு அவர், “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” (முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிமொழிகிறேன்) என்று சொன்னால் நீங்களும் “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” (முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று உறுதிமொழிகிறேன்) என்று சொல்லுங்கள். பின்பு அவர் “ஹய்ய அலஸ் ஸலாஹ்” (தொழுகையின் பக்கம் வாருங்கள்) என்று சொன்னால் நீங்கள் “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் “ஹய்ய அலல் ஃபலாஹ்” (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று சொன்னால் நீங்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னால் நீங்களும் “அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்லுங்கள். பின்பு அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை) என்று சொன்னால் நீங்களும் “லா இலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை) என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். "உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்: முஸ்லிம் 629


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.