அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, March 03, 2016

வேதத்தையுடையவர்களை மூன்று இறைவன் கொள்கையை விட்டு விலகி பரிசுத்தமாக்க அழைக்கும் திருக்குர்ஆன்!

         தினம் ஒரு குர்ஆன் வசனம் - 91

வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல் மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான். இன்னும் (''குன்'' ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான். (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான். ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள். இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள். (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான். அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

(அல்குர்ஆன்:4:171)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.